Villupuram: மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம்...கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்...அச்சத்தில் மீனவர்கள்
மரக்காணம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்தாதல் பரபரப்பு.
விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்தாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையோரம் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் காலை முதலே கடல் சீற்றமாக இருந்தது. இந்தநிலையில் தற்போது கடல் நீரானது கடற்கரையோரம் மணல்மேடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு மற்றும் வலைகளை தாண்டி தற்போது உள்ளே வர தொடங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மீனவர்கள் தனது படகு மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர். கடற்கரையில் இருந்து 100 அடி தூரத்திற்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்... அச்சத்தில் மீனவ கிராம மக்கள் @abpnadu @SRajaJourno #marakkanam #villupuram #sea pic.twitter.com/nWA9xzM4wM
— Siva Ranjith (@sivaranjithsr) July 8, 2023
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்