மேலும் அறிய

Villupuram: மேல்பாதி கோயில் விவகாரம்: இருதரப்பினர் இடையே கோட்டாட்சியர் விசாரணை...பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் கோட்டாச்சியர் விசாரனை தொடங்கியது.

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழாவின் போது பட்டியல் வகுப்பினர் சாமி கும்பிட கோயிலுக்குள் சென்றதால் ஒரு தரப்பினர், பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பட்டியலின மக்களை திரெளபதி அம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு சமூக மக்களிடையேயும் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக இருந்து வந்ததால் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மற்றொருபுறம் தங்களை கோயிலுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. 

இதனையடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சனைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று திரெளபதி அம்மன் கோயில் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் திரெளபதி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (09-06-23) நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என இரு சமூகங்களைச் சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் கடந்த 7ஆம் தேதி சம்மன் வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள 80 பேரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 38 பேரும் என மொத்தம் 62 பேர், விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தற்போது நேரில் ஆஜராகியுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டவர்களை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர். நேரில் ஆஜராகியுள்ள இருதரப்பினருடனும் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது இருதரப்பினரும் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நடைபெறுவதையொட்டி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி.. Comet முதல் Gloster வரை.. ஆஃபர்களை அள்ளித்தந்த MG
ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி.. Comet முதல் Gloster வரை.. ஆஃபர்களை அள்ளித்தந்த MG
Embed widget