மேலும் அறிய

Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!

முதல்வர் விஜயை ஒருமையில் பேசி விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறைக்கு சென்றுள்ள நிலையில், அவரது மகன் அக்‌ஷய் கோபத்தில் விஜயின் மகன் பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் மிரட்டல் விடுத்த விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தரக்குறைவாக பேசிய மார்க்கண்டேயன்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட்டு மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ம் தேதி அப்பகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசினார். 

குறிப்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதால் கதவுகளை அடைக்க வேண்டும் என விஜய் பேசிய கருத்தை குறிப்பிட்டு, கதவை அடைத்தால் எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தைகளை கொட்டினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் கடுப்பான தவெகவினர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் புகாரளித்தனர்.

வீடு புகுந்து கைது செய்த போலீசார்

இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று காலையில் மார்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். முதலில் போலீசாரிடம் சபாநாயகர் அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது என ரூல்ஸ் பேசிய மார்க்கண்டேயனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட விவகாரம் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து நழுவ மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

Also Read: TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்

15 நாட்கள் நீதிமன்ற காவல்

மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கு விவரங்களையும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். 

விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்

இதற்கிடையில் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மகனான அக்‌ஷய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மூளை தான் நம் உடம்பில் எல்லாம் முடிவு செய்கிறது. அப்படிப்பட்ட மூளையாக இருப்பது தான் சட்டமன்றம். அதனுள் எல்லா எம்.எல்.ஏ.,க்களையும் அடைத்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். அதன்மூலம் தாங்கள் நினைத்த சட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார். வரலாறு இதுபோன்ற பல விஷயங்களைப் பார்க்கிறது. 

ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு மணி நேரம் விசாரிக்கிறீர்கள். 13 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. எங்க அப்பாவுக்கு உடல்நல பிரச்னைகள் இருக்கிறது. அவரை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். உங்க பையன் தான் உங்க கூட இல்லை முதலமைச்சர் அவர்களே, எங்க அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் பண்ணாதீர்கள்” என தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணங்களின் திருவிழா: ஜூலையில் 1,200 வண்ணத்துப்பூச்சிகள் பதிவு
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணங்களின் திருவிழா: ஜூலையில் 1,200 வண்ணத்துப்பூச்சிகள் பதிவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget