உங்கள் பைக்கிற்கு வீட்டிலேயே பஞ்சர் போடுவது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பஞ்சர் என்பது வாகனங்களில் தவிர்க்க முடியாதது. அதனை நாம் வீட்டிலெயே பஞ்சர் கிட் இருந்தால் சரி செய்யலாம்

டயரில் உள்ள பஞ்சரை கண்டுபிடிக்கவும்

பஞ்சர் கிட்டில் இருக்கும் 'ரீமர் டூல்' கருவியைக் கொண்டு அந்த துளையை சுத்தம் செய்யவும்.

ஸ்டிக்கி ரப்பர் ஸ்ட்ரிப் பசை மீது க்ளூ தடவி இன்செர்ட் டூல் அதனை பஞ்சர் துளையில் பொருத்தவும்

டூலை வெளியே இழுத்தால் ரப்பர் மட்டும் பஞ்சர் துளையை அடைத்துக் கொள்ளும்.

கத்திரிக்கோல் வெளியே உள்ள அதிகப்படியான ரப்பரை வெட்டி விடவும்

டயரில் காற்றை நிரப்பி தண்ணீர் ஊற்றி காற்று கசியவில்லை என்பதை உறுதி செய்யவும்

ட்யூப் லெஸ் டயரில் பஞ்சர் போடுவது என்பது மிக எளிது. அதேசமயம் ட்யூப் உள்ள டயரில் பஞ்சர் வீட்டில் வைத்து போடுவது கஷ்டமாகும்.

இதன்மூலம் ரூ.200 சேமிக்க முடியும். அதேசமயம் அதிக பாதிப்படைந்த டயர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.