'அன்னியூர் சிவா பாக்கெட்டில் நான்கு அமைச்சர்கள்' - அமைச்சர் எ.வ. வேலு பேசியது என்ன ? திகைத்து நிற்கும் திமுகவினர்
முகவர்களாக உள்ளவர்கள் யார் அதிக வாக்குகள் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் தங்க சங்கிலி பெற்று தருவேன்- அமைச்சர் எ.வ. வேலு உறுதி
விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா நான்கு அமைச்சர்களை தனது பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் புல்லு பூண்டு கூட முளைக்கலாம், பாஜக முளைத்துவிட்டால் பாசிசம் வளர்ந்து விடும் என்றும் ஆன்மிக சிந்தனை உள்ள பூமி திருவண்ணாமலை என்றாலும் பெரியார் சிந்தனையில் வளர்ந்தவன் இந்த எ.வ வேலு என்றும் ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்க முடியாது என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
"அன்னியூர் சிவா பாக்கெட்டில் நான்கு அமைச்சர்கள்"
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கொசப்பாளையம் கிராமத்திலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, எம்பி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திமுகவில் கடந்த 26 ஆண்டுகளாக மாவட்ட கழக செயலாளராக தான் உள்ளதாகவும் இந்த பதவி எனக்கு வேண்டாம் என்ன விட்டா கூட போதும் பராவில்லை என்றும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பாக்கெட்டில் நான்கு அமைச்சர்கள் உள்ளதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னரே வேட்பாளர் அன்னியூர் சிவா அமைச்சரான தன்னிட்டம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
"புல்லு பூண்டு கூட முளைக்கலாம் பாஜக முளைத்துவிட்டால்"
அமைச்சர் நேரு, பன்னீர் செல்வம், வேலு வாகிய நான் என்னையும் வேட்பாளர் அன்னியூர் சிவா பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும் அன்னியூர் சிவா வெற்றி பெற்றவுடன், அவரது முதல் கோரிக்கையான சாலையை அமைத்து தருவேன் என உறுதியளித்தார். தேர்தலில் தின்னை பிரச்சாரம் தான் கை கொடுத்துள்ளதாகவும், முதலமைச்சரின் சாதனைகளை தின்னை பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் புல்லு பூண்டு கூட முளைக்கலாம் பாஜக முளைத்துவிட்டால் பாசிசம் வளர்ந்து விடும் என்றும் அதிமுக நமக்கு எதிரி அல்ல அவர்கள் போட்டியிடவில்லை என கூறினார்.
மேலும் தனியார் தொலைகாட்சி ஆசிரியர் பாராளுமன்ற தேர்தலில் கேட்ட கேள்வியை குறிப்பிட்டு ஆன்மிக சிந்தனை உள்ள பூமி திருவண்ணாமலை என்றாலும் பெரியார் சிந்தனையில் வளர்ந்தவன் ஏ.வ வேலு என்றும் ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்க முடியாது என தெரிவித்தார். தமிழகத்தில் 37 சதவிகிதம் உள்ள வன்னிய மக்கள் உள்ள நிலையில் 10.5 சதவிகிதத்தில் ஒடுக்கப்பார்பதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட 7 வாக்கு சாவடிகளில் முகவர்களாக உள்ளவர்கள் யார் அதிக வாக்குகள் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் தங்க சங்கிலி பெற்று தருவேன் என அமைச்சர் எ.வ வேலு உறுதியளித்தார்.