மேலும் அறிய

Vijayakumar IPS congrats Sylendra Babu: சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,க்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபுவுக்கு போலீஸ் வட்டாரத்தில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபுவுக்கு விஜயகுமார் ஐபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம்&ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, போலீஸ் வட்டாரத்தில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் சைலேந்திர பாபுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayakumar IPS congrats Sylendra Babu: சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,க்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., வாழ்த்து!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி சைலேந்திரபாபு பிறந்தார். குழித்துறையில் உள்ள அரசுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்டவர். இந்த ஆர்வத்தின் காரணமாக மதுரையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றார்.

கல்லூரி காலத்தில் அனைத்து மாணவர்களை போல கடைசி பெஞ்ச் மாணவராக இருந்த சைலேந்திரபாபு, ஒரு நாள் தனது கல்லூரியில் சிறப்புரையாற்றிய ஒருவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இனி “காவல்துறைதான் தன்னுடைய பாதை” என்று தீர்மானித்தார். இதை சைலேந்திரபாபுவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொதுச்சட்டம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார் சைலேந்திரபாபு. காவல்துறைதான் தன்னுடைய பாதை என்று தீர்க்கமாக தீர்மானித்த பிறகு, விடா முயற்சி மற்றும் கடினமாக உழைப்பு ஆகியவற்றின் மூலமாக 1987ம் ஆண்டு தனது 25வது வயதில் இந்திய காவல்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற பிறகு, ஹைதராபாத் காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு 1989ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி.)யாக தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

இதையடுத்து, 1992ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அவரது சிறப்பான பணி காரணமாக சிவகங்கை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளராக சைலேந்திராபுவை அப்போதைய அரசு நியமித்தது. பின்னர், சென்னையில் உள்ள அடையாறில் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று சில காலம் பணியாற்றினார்.

2001ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று விழுப்புரத்திலும், 2006ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னையிலும் பணியாற்றினார். 2012ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திரபாபு திருச்சியில் டி.ஐ.ஜி.யாகவும், கரூர் தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். சிறப்பு காவல்படையின் ஐ.ஜி,யாக பணியாற்றிய சைலேந்திர பாபுவை, தமிழக அரசு கோவை மாநகர ஆணையராக நியமித்தது. கோவை மாநகரா ஆணையராக அவர் பணியாற்றியபோது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோவையில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கணினிப்பயற்சி குறித்தும், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 2019ம் ஆண்டு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திர பாபு தற்போது ரயில்வே துறையின் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். நாளை தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget