Thirumavalavan Hospitalized: விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு..?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சாதாரண குளிர் காய்ச்சல் என தெரிவித்துள்ளனர். நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 30 ஆம் தேதி வரை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம் என தொடர் பயணம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.