
Watch Video: நெல்லையை அச்சுறுத்தும் மலைப்பாம்பு.. திகிலில் ஊர் மக்கள்.! அசர வைக்கும் வைரல் வீடியோ !
மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக பாம்புகள் தொடர்பான வீடியோ என்றால் அது வேகமாக வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு பாம்பு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் இடம்பெற்ற இடம் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Wild always have the right of way. Please give them safe passage🙏🙏 pic.twitter.com/WHWdjOBjhU
— Susanta Nanda IFS (@susantananda3) March 5, 2022
இந்தச் சூழலில் இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருநெல்வேலியின் சிங்கி குளம் பகுதி அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சி இது என்று சிலர் கூறி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இந்த பெரிய மலைப்பாம்பு இருப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

