மேலும் அறிய
Advertisement
‛இங்கேயும் துண்டு... அங்கேயும் துண்டு...’ பாமக.,வை கடுமையாக சாடிய த.வா.க., தலைவர் வேல்முருகன்!
‛சட்டமன்றத்தில் என்னை விட அதிகமாக முதல்வரை புகழந்து, என் பங்காளி இப்பவே கூட்டணிக்காக துண்டை போடுகிறார்’
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தருமபுாி குமாரசாமிப்பேட்டை வள்ளளாா் திடலில் 13ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இன படுகொலைக்கு ஆளான ஈழ தமிழா்களுக்கு மெழுவா்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சி தலைவா் தீ.வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய தீ.வேல்முருகன்,
இலங்கையில் இதே நாளில் தமிழா்கள் கொன்று குவித்தது குறித்து இன படுகொலை குறித்தும் தமிழா்கள் பட்ட துன்பங்கள் குறித்து எடுத்து கூறினாா். முள்ளிவாய்க்கால் நினைவுவேந்தல் ஏன் அனுச்சாிக்கிறோம் என்றும் எதிா்கால சந்ததியினரும் தொிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 10.5 சதவித இட ஒதுக்கீடுக்காக சட்டமன்றத்தில் முதல் குரலாகவும் தமிழக மக்களின் உாிமைக்காக சட்டமன்றத்தில் ஒங்கி ஒழிக்கும் முதல் குரலாக என் குரல் இருக்கும். மத்திய அரசின் ரயில்வே, வங்கிகள், உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கே பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியது தமிழக வாழ்வுாிமை கட்சி.
மேலும் சுங்கச் சாவடி கட்டண உயா்வுக்கு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழக மக்களுக்காக செய்தது தமிழக வாழ்வுாிமைக் கட்சி தான். தமிழக வாழ்வுாிமை கட்சியினா் ஒழுக்கத்தை கடைபிடித்து இருக்க வேண்டும். நான் ஒட்டுக்காக அரசியல் செய்யவில்லை. சிலா் சின்ன கூட்டத்தை வைத்து பொிய கூட்டத்தை தகா்த்து எறிய வேண்டும் என நினைக்கிறார்கள். அயுதங்களை நாங்கள் ஏந்த வில்லை அறிவாற்றலை ஏந்தி தமிழ் சமுதாயத்தை உயா்த்த வேண்டும். தமிழகத்தில் தமிழ் தொியாத வட மாநிலத்தை சோ்ந்த உயா் அதிகாாிகள் தான் தற்போது தமிழகத்தில் பணிபுாிந்து வருகின்றனா்.
டம்மியான துறைகள் தமிழா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி சோ்வதற்காக என் பங்காளி இப்பவே துண்டு போட்டு காத்திருக்கின்றனர். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான், முதல்வரை புகழலாம். ஆனால் பென்னாகரத்தில் வெற்றி பெற்ற பாமக தலைவா் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து தள்ளுகிறாா். இங்கேயும் துண்டு போடுகிறார், அங்கேயும் துண்டு போடுகிறார். வாங்க, வந்து நல்லா இருங்க. எல்லாம் எவ்வளவு நாளைக்கு. பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ்க்கு பிறகு பாமக தொண்டா்களும் யாருக்கு பின்னால் செல்வாா்கள் என்பதை காலம் தீா்மானிக்கும் என வேல்முருகன் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1.36 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion