மாறுகிறதா கள நிலவரம்.. அன்புமணி மகளுக்கு விசிகவிடம் இருந்து வந்த வாழ்த்து.. பின்னணி என்ன ?
விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் விசித்திரமான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசியல் களம் பிற மாநிலங்களில் காட்டிலும் தமிழ்நாட்டில் வித்தியாசமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக, மாநிலக் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு தான் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்ததாக பல சிறு கட்சிகள் தங்களுக்கான வாக்கு வங்கிகளை வைத்துக்கொண்டு, அரசியல் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர்.
எதிர் துருவ அரசியல்
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை குறிப்பிட்ட சமுதாயத்திடம், செல்வாக்கு மிக்க கட்சிகளாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து பயணித்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு என்பது அதிகரிக்க துவங்கியது. தற்போது இரண்டு கட்சிகளும் எதிர் துருவத்தில் நின்று அரசியல் செய்து வருகின்றேன். பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என விசிக வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
இந்தநிலையில் அடுத்த கட்சியின் தலைவர் திருமாவளவனின், முக்கிய நம்பிக்கை கூறிய நபராக இருக்கக் கூடிய வன்னி அரசு பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக இருக்கக்கூடிய அன்புமணியின் மகளை வாழ்த்தியிருக்கும் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.
சினிமாவும் அரசியலும்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அந்த வகையில் சங்கமித்ரா சவுமியா அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தனது தாய் சௌமியாவிற்கு, தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது கவனத்தை பெற்று இருந்தார். வித்தியாசமான முறையில் நாடாளுமன்ற தேர்தலில் சங்கமித்ரா பிரச்சாரம் செய்திருந்தது, கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் அலங்கு திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
வன்னியரசு வாழ்த்து எதற்காக ?
இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வன்னி அரசு, விரைவில் வெளிவரவிருக்கிற அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் அவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம் என தெரிவித்துள்ளார்.
இணைகிறதா இரண்டு துருவங்கள்
அரசியல் தளத்தில் எலியும் பூனையாக இருக்கும் இரண்டு தரப்பும், சந்திப்பதை நிச்சயம் தவிர்த்து இருக்க முடியும். அப்படியே சந்தித்திருந்தாலும் தனியாக வாழ்த்து பதிவு போட்டிருப்பின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் கூட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தலித் மக்கள் பாமகவுக்கு ஆதரவளித்தால் முதலமைச்சராக, பாமக தலித் ஒருவரை முதலமைச்சராக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அலங்கு திரைப்படம்
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.
மேலும், இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.
இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர் “உறுமீன்”, “பயணிகள் கவனிக்கவும்” என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் என தகவல் வெளியாகியுள்ளது.