மேலும் அறிய

"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!

தாமரை மலரும், தாமரை மலறும் என்று மழைக்கால தவளை போன்று ஒருவர் கத்திக் கொண்டு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்பிக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், "மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். 

"மழைக்கால தவளை போன்று ஒருவர் கத்திக் கொண்டு இருக்கிறார்" நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறார். கேரளாவில் ஒரு நடிகரை வைத்து பாஜக ஒரு இடத்தை பெற்றுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான். 

எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை. தேசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். அவர் தொடர் வெற்றியை பெற்று வருகிறார். இதற்கு காரணம் ஸ்டாலினின் ஆளுமை தான்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும். அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி. நான்கு தேர்தல்களை சந்தித்தும் கூட்டணியில் சிதைவு இல்லை. மழைக்கால தவளை போன்று ஒருவர் கத்திக் கொண்டு இருந்தார். தாமரை மலரும் , தாமரை மலறும் என்று.

திராவிட அரசியல், இந்த கூட்டணி தோல்வி அடையும் என சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், நான் பார்த்துக் கொள்கிறேன் என நேரடியாக களம் கண்டார் ஸ்டாலின். திருமாவளவன் எதிராக பரப்பபடும் கருத்துகளுக்கு பொருட்படுத்தாமல் அனைத்து அமைச்சர்களை வேலை செய்ய வைத்தவர் முதல்வர்.

திமுகவின் முப்பெரும் விழா: இந்தியா முழுவதும் பயணம் செய்து அரவிந்த கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி கொண்டு வந்தவர். அகில இந்திய அளவில் கூட்டணி உருவாக்க முயற்சி செய்தார் ஸ்டாலின் தான். பொறுப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என செயல்பட்டார் முதல்வர்.

பாஜகவை தனிமை படுத்த கூட்டணியை உருவாக்கினார். 40 நமதாக இருக்கலாம். ஆனால், நாடு இன்னும் நம்முடன் இல்லை. ஆனால், தமிழ்நாடு நம்முடன் தான் உள்ளது. தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். இன்னும் வியூகம் வகுக்கும் நேரம் உள்ளது. 

எதிர்கட்சிகள் தெறித்து ஓடுகிறார்கள். அதிமுக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்து உள்ளனர். மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோவையில் வெற்றி பெற்றோம். இந்தியா கூட்டணி உருவாக அடித்தளம் ஈட்டவர் முதல்வர். இந்தியா கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டியுள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget