மேலும் அறிய

‛கொங்கு நாடு தேவை உள்ளது...’ -வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!

கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் எனச் சொல்லப்படுகிற பல்வேறு பிரச்சனைகள், பல ஆண்டுகளாக ஏக்கமாகவே உள்ளது -வானதி பேட்டி

கோவை சித்தாபுதூர் அருகே வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை  அலுவலகத்தில், அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆடிட்டர் ரமேஷின் உருவப் படத்திற்க்கு மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வானதி சீனிவாசன்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து சிபிசிஐடி விசாரணையின் இறுதி தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான தொண்டர்களை பலி கொடுக்கும் இயக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இந்த சூழல் கிடையாது. ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நீதி கிடைப்பதில் இருக்கும் தாமதம், பல குற்றவாளிகளை உருவாக்கும். விரைவாக விசாரணை முடித்து நியாயம் வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை மாநில அரசு விரைந்து மக்களுக்கு செலுத்த வேண்டும். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோயில்களை அழகு படுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளியிடும். திமுக குறித்து விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு, பாஜகவையும் பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

‛கொங்கு நாடு தேவை உள்ளது...’ -வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், “கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது. கட்சியின் பொறுப்பாளராக கட்சியின் கருத்தை தான் பிரதிபலிக்கத் தான் முடியும். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என நாங்கள் (பாஜக) நினைக்கவில்லை. ஆனால் கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் எனச் சொல்லப்படுகிற பல்வேறு பிரச்சனைகள் பல ஆண்டுகளாக ஏக்கமாக உள்ளது. வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்ற போகிறதா என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரிசீலனை வரலாம்.”

கொங்குநாடு தேவை உள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லா பகுதிக்கும் தேவை உள்ளது. நாங்கள் இந்த பகுதியின் வளர்ச்சியைப் பற்றி பேசுவோம். பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்கனவே சொல்லியுள்ளோம்” எனப் பதிலளித்தார்.

தலைப்பு செய்திகள்

கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
காவிரி - கோதாவரி நதி இணைப்பு: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த அன்புமணி கோரிக்கை!
காவிரி - கோதாவரி நதி இணைப்பு: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த அன்புமணி கோரிக்கை!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Embed widget