மேலும் அறிய

அடடே... மனிதர்களுக்குன்னு தனியா 'பிரிட்ஜ்'-ஆ? ஜப்பான்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!

கடும் கோடை வெப்பத்தைத் தணிக்க ஜப்பானிய அறிவியலாளர்களின் வெறும் 10 நிமிடங்களில் உடலைக் குளிர்விக்கும் மனிதர்களுக்கான பிரிட்ஜை கண்டுபிடித்து அசத்திய உள்ளனர்.

மயிலாடுதுறை: உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாகக் கோடைகால வெப்ப அலையின் (Heatwave) தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் கோடை காலத்தில் பதிவாகும் மிக அதிகப்படியான வெப்பநிலை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்திலிருந்து மனிதர்களைக் காப்பதற்காக ஜப்பான் நாடு ஒரு விசித்திரமான மற்றும் அதிநவீன கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் 'மனிதர்களுக்கான பிரிட்ஜ்' (Human Refrigerator) தொழில்நுட்பமாகும்.

வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தின் மறுவடிவம்

ஜப்பான் நாட்டில் தெருவுக்குத் தெரு அமைக்கப்பட்டிருக்கும் குளிர்பான 'வெண்டிங் மெஷின்' (Vending Machine) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் ஒரு மனிதன் சௌகரியமாக உட்காரும் அளவிலான பெட்டி (Pod) போன்று இது காட்சியளிக்கிறது. இந்தச் சாதனத்தின் உட்புற வெப்பநிலை எப்போதும் மாறாமல் 15 டிகிரி செல்சியஸ் (59 டிகிரி ஃபாரன்ஹீட்) என்ற அளவிலேயே பராமரிக்கப்படும் வகையில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

5 நிமிடங்களில் நிவாரணம், 10 நிமிடங்களில் இயல்புநிலை

வெப்பத்தால் அவதியுறும் ஒரு தனிநபர் இந்த சாதனத்தின் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்த அடுத்த நொடியே இதன் குளிரூட்டும் செயல்பாடு தொடங்குகிறது. பெட்டியின் உட்புறத்தில் இருந்து சரியாக 5 டிகிரி செல்சியஸ் (41 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவிலான வீரியமிக்க குளிர்ந்த காற்று நேரடியாக மனிதரின் தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் சீராக வீசப்படுகிறது.

இதன் மூலம், வெயிலில் அலந்து களைத்துப் போய் வருபவர்களுக்கு வெறும் 5 நிமிடங்களில் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும், உடலின் உள் வெப்பநிலையைக் கணக்கிட்டு, வெறும் 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்பநிலையை முழுமையான இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது.

தானியங்கி பாதுகாப்பு & மின்சாரச் சிக்கனம்

மனித உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்து மரத்துப்போவதைத் (Hypothermia) தடுப்பதற்காக இதில் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவர் உள்ளே அமர்ந்து 20 நிமிடங்கள் நிறைவடைந்தவுடன், இந்த மெஷின் தானாகவே தனது குளிரூட்டும் இயக்கத்தை நிறுத்திவிடும் (Auto Shut-off). இதன் மூலம் நபரின் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதாரண ஏ.சி. (Air Conditioner) இயந்திரங்களை விட இது பாதியளவு (50%) மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

விலை மற்றும் தற்போதைய பயன்பாடு

தற்போது ஜப்பான் நாட்டில் உள்ள நகராட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள ஓய்வறைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இவை முதற்கட்டமாக நிறுவப்பட்டு வருகின்றன. இந்த அதிநவீன 'மனித பிரிட்ஜ்' சாதனத்தின் விலை ஜப்பானிய மதிப்பில் சுமார் 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது உலக நாடுகளின் வர்த்தகச் சந்தைக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார செலவு குறைவு என்றாலும், ஒரு ஏசி அறைக்குள் பலர் அமர்ந்து வெப்பத்தை தணிக்கும் நிலையில், ஏசிகளை விட பன்மடங்கு விலை உயர்வாக உள்ள இந்த தனிநபர் குளிர்சாதன பெட்டி பட்ஜெட்டில் செலவு செய்யும் நாடுகளுக்கு இது பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"நெஞ்சுவலி என நாடகம்" உடற்கூறாய்வில் அம்பலமான ரகசியம் !! Ex - ரவுடி கொலையில் தவெக நிர்வாகி கைது
எதிர்பார்ப்பு இல்லை... சுயநலம் இல்லை... 6,000 பேருக்கு ரத்ததானம்... 500 இளைஞர்களின் தன்னலமற்ற சேவை- விழுப்புரத்தில் நெகிழ வைக்கும் மனிதநேயக் குழு!
எதிர்பார்ப்பு இல்லை... சுயநலம் இல்லை... 6,000 பேருக்கு ரத்ததானம்... 500 இளைஞர்களின் தன்னலமற்ற சேவை - விழுப்புரத்தில் நெகிழ வைக்கும் மனிதநேயக் குழு!
மரத்தடியில் தொடங்கிய நூலகம் முதல் சர்வதேச காமிக்ஸ் பதிப்பகம் வரை... புதுச்சேரி மனிதரின் நெகிழ்ச்சிப் பயணம்!
மரத்தடியில் தொடங்கிய நூலகம் முதல் சர்வதேச காமிக்ஸ் பதிப்பகம் வரை... புதுச்சேரி மனிதரின் நெகிழ்ச்சிப் பயணம்!
4 மாத ஊதியம் இல்லை: தீபாவளிக்கு முன் தொழிலாளர்களுக்கு வழங்க அன்புமணி கோரிக்கை!
4 மாத ஊதியம் இல்லை: தீபாவளிக்கு முன் தொழிலாளர்களுக்கு வழங்க அன்புமணி கோரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget