5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
Brezza Facelift 2026 Safety Rating: மாருதி பிரெஸ்ஸா 5 ஸ்டார் பாதுகாப்பு: பாரத் NCAP-ல் சாதனை, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

இந்திய வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பாதுகாப்பு சோதனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது இந்தியாவிலேயே நடத்தப்படும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் இந்த கார் முழுமையான 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று சாதித்துள்ளது.
கிராஷ் டெஸ்ட் முடிவுகள்
பாரத் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சோதனை முடிவுகளின்படி, மாருதி பிரெஸ்ஸா கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (Adult Occupant Protection - AOP) 32-க்கு 30.41 புள்ளிகளைப் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
அதேபோல, குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் (Child Occupant Protection - COP) 49-க்கு 43 மதிப்பெண்களை குவித்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. முன்பக்க மோதல் மற்றும் பக்கவாட்டு மோதல் என இரு சோதனைகளிலும் காரின் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்ன சிறப்பு அம்சங்கள்?
இந்த பாதுகாப்பான ரேட்டிங்கிற்கு காரில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக அமைந்துள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் சேர்த்து உருவாக்கப்பட்டபுதிய பிரெஸ்ஸா வெளியாக உள்ளது. மாருதி சுசுகி விரைவிலேயே சிஎன்ஜி வேரியண்டிலும் வெளியாக உள்ளது.
பாதுகாப்பு குறைவா?
மாருதி கார்கள் என்றாலே பாதுகாப்பு குறைவானவை என்ற நீண்ட கால விமர்சனம் சமீப காலமாக உடைக்கப்பட்டு வருகிறது. குளோபல் என்சிஏபி-யில் 5 ஸ்டார் வாங்கிய புதிய மாருதி டிசையர் மற்றும் பாதுகாப்பான மாடல்களான கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ ஆகிய கார்களின் வரிசையில், தற்போது பிரெஸ்ஸாவும் இணைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























