மேலும் அறிய

vaiko: ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவேண்டும்” - வைகோ

vaiko: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணிதிரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிவழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது. அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக், ஜான்சி, செல்வசேகர், காளியப்பன், ஜெயராமன் ஆகிய 13 பேர் பலியானார்கள். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிவிசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று (18 அக்டோபர்2022) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

தூத்துக்குடியை ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றிய அன்றைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வேண்டும்; அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டோரின் இல்லங்களுக்கு நான் நேரில் சென்று ஆறுதல் கூறினேன். காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன். அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.

தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தைத் தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது. எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை.

சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்; துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்பைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது.

இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது, கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது. விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
Embed widget