மேலும் அறிய

கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது

மூன்று மாத கள்ளக் காதல் விவகாரம் - கொடூரக் கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு

சின்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வைரமணி ( வயது 46 ) என்பவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் அவரது மனைவி இவரை பிரிந்து கேரளாவில் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராணி ( வயது 38 ) என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காட்டு ராணியும் அதே செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த தொடர்பின் காரணமாகவே வைரமணியின் மனைவியின் அவரை பிரித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆணுடன் தனிமையில் இருந்த பெண் - ஏன் இங்கு வந்தாய் என கேள்வி எழுப்பிய மகன்

இந்த பழக்கம் குறித்து காட்டு ராணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் வேலைக்குச் செல்வதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும், வைரமணி தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை ஆண்டிபட்டி பங்களா அருகே உள்ள பெரியார் பாசன கால்வாய் கரையோரம் தனியாக வருமாறு காட்டு ராணியை வைரமணி அழைத்ததாக கூறப்படுகிறது.

அங்கு தனிமையில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக மது அருந்த வந்த காட்டு ராணியின் 17 வயது மகனும் உறவினரான ஹரிதரன் ( வயது 20 ) என்பவரும் அவர்களை பார்த்துள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த இருவரும், "ஏன் இங்கு வந்தாய் ?" என காட்டு ராணியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, "அவர் என்னை மிரட்டி வரவழைத்தார் " என காட்டு ராணி கூறியதாக தெரிகிறது.

கை கலப்பாக மாறிய சண்டை

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற காட்டு ராணியின் மகனும் ஹரிதரனும், வைரமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த வைரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முகம் சிதைந்த நிலையில் அவரது உடல் கால்வாய் கரையில் கிடந்தது.

முதலில் இது சாலை விபத்து என கருதிய வாடிப்பட்டி போலீசார், உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கள்ளக் காதல் தொடர்பே இந்தக் கொலையின் பின்னணியாக இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டு ராணி, அவரது 17 வயது மகன் மற்றும் ஹரிதரன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget