மேலும் அறிய

Vehicle Sticker : வாகனங்களில் ஸ்டிக்கர் விவகாரம்; விளக்கம் அளித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம்.

PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்தனர். மேலும், வாகனங்களில் இதுபோன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால் மே 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், மே 2ஆம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திரும்பப் பெற வலியுறுத்தல்

எனினும் இந்த அறிவிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தின. மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றமும் சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் நாளை (மே 2) முதல் இந்த நடைமுறை வர உள்ளதை அடுத்து, சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், நம்பர் பிளேட்டில் எந்த வித சின்னங்களோ, துறையின் அடையாளங்களோ, பெயரோ எழுதக் கூடாது. அரசு அங்கீகரித்த எழுத்துக்களோடு எண்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கவேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஊடகங்கள், வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது குறித்த விளக்கத்தையும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதாவது ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் வாகனம் வேறொரு பெயரில் இருந்து அதனை பயன்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, உறவினர்கள் யாராவது ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்தி வந்தாலோ, கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அபராதம் எவ்வளவு?

இது அனைத்து துறையினருக்கும் பொருந்தும் என்றும், இந்த விதிமீறலைச் செய்துவிட்டு சிக்கிக் கொண்டால் அவர்களுக்கு முதல் தடவை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். 2-வது தடவை ரூ. 1500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமீறலில் ஈடுவோர் மீது மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget