மகளிர் சுய உதவி குழுவிற்கு கொண்டாட்டம்.! உதயநிதி சொன்ன சூப்பர் அறிவிப்பு
மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் விரிவாக்கம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

414 கோடி ரூபாய் திட்டத்தை தொடங்கிய துணை முதலமைச்சர்
பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு குறைந்த விலையில் கடன் உதவி திட்டம், மானிய கடன் உதவி திட்டம், சொந்தமாக தொழில் தொடங்க நிதி உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் மகளிர் சுய உதவிக் சூப்பரான திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தவர் 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் 15 கோடி மகளிர் விடியல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 22 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமை தொகை
தமிழ்நாட்டின் திட்டங்களை பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் பாராட்டி அதை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 19 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்ட வழங்கப்பட்டுள்ளது. இனி நீங்க நிம்மதியா உண்டு, உறங்கலாம். சொந்த வீடு கனவை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் வரும் டிசம்பர் 15 முதல் கூடுதல் மகளிர்களுக் உரிமை தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்தியாவில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் மகளிர்களை சென்று சேருவதாக தெரிவித்தார்.
இந்த அட்டையைப் பயன்படுத்தி, தமிழக முழுவதும் பெண்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை 100 கிலோமீட்டர் தொலைவு வரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு, தங்கள் உற்பத்திப் பொருட்களை நகர்ப்புற சந்தைகளில் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.




















