Anna Birthday | ”பெரியாரின் கொள்கை கைத்தடி” : அண்ணா பிறந்தநாளில் புகழாரங்களால் நிரம்பும் ட்விட்டர்!
அண்ணாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி பதிவிட்டு வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று. 1967ல் தமிழக அரசியலில் திராவிடம் மலரக் காரணமாக இருந்தவர். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டு வந்தது. 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழத்திலிருந்து விலகிய அண்ணா திமுகவை தொடங்கினார். தனித் தமிழகம் என்ற பெரியாரின் முன்னெடுப்பே அண்ணா திமுகவைத் தோற்றுவிக்க தனிப்பெருங் காரணமாக இருந்தது என்பது வரலாறு. இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி அவர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்! pic.twitter.com/vWk0X0jpmH
— M.K.Stalin (@mkstalin) September 15, 2021
From மாபெரும் தமிழ் கனவு, published by The Hindu Tamil. pic.twitter.com/r2FBfyNWM1
— RadhakrishnanRK (@RKRadhakrishn) September 15, 2021
நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர்,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 15, 2021
சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன். pic.twitter.com/7otUGA2LaJ
பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளில் வணங்குகிறோம். pic.twitter.com/F0IbCh6Mw3
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 15, 2021
இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற ஒற்றைச் சிந்தனையோடு, வீழ்ந்து கிடந்த தமிழினத்தைத் தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த "தென்னாட்டு பெர்னாட்ஷா" என்று அழைக்கப்படும் பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் இன்று.#HBDAringarAnna
— KR Periakaruppan (@OfficeOfKRP) September 15, 2021
1/2 pic.twitter.com/siAy7Ma5cg
'பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin
— DMK (@arivalayam) September 15, 2021
அவர்கள், சென்னை - அண்ணா சாலையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்'#HBDArignarAnna #முப்பெரும்விழா pic.twitter.com/S1m5IrRf95