TVK Vijay: கூட்டணியில் இணைய 100 சீட் வேண்டும்.. பிடிவாதம் பிடிக்கும் விஜய்! அதிமுக அதிர்ச்சி
விஜய் 100 தொகுதிகளை தரும்பட்சத்தில் தான் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்றால் 100 தொகுதிகளை விட்டுத்தர வேண்டும் தவெக தலைவர் விஜய் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக விஜய்:
தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் என்கிற முன்னெடுப்பில் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கினார், இதற்காக தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியிலும் இரண்டாவது மாநாட்டை மதுரையிலும் நடத்தி முடித்தார். தனது தலைமையில் ஆட்சி என்கிற முன்னெடுப்போடு மக்கள் சந்திப்பை மாவட்ட வாரியாக நடத்தி வந்தார்.
கரூர் துயரச்சம்பவம்:
திருச்சி, அரியலூர், திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்க்கொண்ட நிலையில் அவரை காண்பதற்கும் மக்கள் பெருமளவில் விஜயை காணபதற்காக கூடினர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது அங்கு ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டில் முடங்கிய விஜய்:
இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் விஜய் வீட்டிலேயே முடங்கியுள்ளார், மழை பாதிப்பு நெல் மூட்டைகள் கொள்முதல் பிரச்சனை என அடுத்தடுத்து பல முக்கிய பிரச்சனைகள் தமிழ்நாட்டில் உருவெடுத்து வரும் நிலையில் விஜய் தற்போது வரை மெளனம் காத்து வருகிறார். இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருந்து வருகிறார்.
கூட்டணியில் இணைக்க முயற்சி:
இதற்கிடையில் தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான வேலையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. கரூர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு தனது ஆதரவை அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார். கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாக தெரிகிறது.
ஆனால் கொள்கை எதிரியான பாஜகவோடு அல்லாத கூட்டணியை வைக்கும்பட்சத்தில் அதிமுகவுடன் இணைய தயார் என்பதை விஜய் விருப்பம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது
100 தொகுதிகளை கேட்கும் விஜய்:
மேலும் கூட்டணியை வைக்கும்பட்சத்தில் 100 தொகுதி வரை தர வேண்டும் என விஜய் பிடிவாதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தவெகவுக்கு 20 தொகுதிகளை தருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 40 தொகுதிகளை தர உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.
ஒரு வேளை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் விஜய் எதிர்கட்சி தலைவராக வர வாய்ப்புள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விஜய் 100 தொகுதிகளை தரும்பட்சத்தில் தான் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





















