TVK Madurai Maanadu: திமுகவை தாக்கி பேசிய தவெக.. திடீரென கட் ஆன லைவ்.. இதுதான் காரணமா!
தவெக மாநாட்டில் அக்கட்சியின் நிர்வாகி பேசியபோது திடீரென லைவ் கட் ஆனதால் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் தவெக கட்சியின் 2ஆவது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர், மற்றும் மதுரை மேலாண்மை பொறுப்பாளர் தவெக கட்சி குறித்தும் விஜய் குறித்தும் பேசினார்கள். அவர்களை தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், திமுகவை கடுமையாக தாக்கி பேசியபோது திடீரென லைவ் கட் ஆனது.
தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியில் கடுமையான குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம், அதில் நடந்த பிரச்னைகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதேபோன்று தொடர் கொலை, கொள்ளையும் நடப்பதையும் பார்க்கிறோம். அதைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து ஊழல் அரசை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி பேசினார். அப்போது திடீரென லைவ் கட்டானது.
ஒரு வேளை தமிழகத்தை ஆளும் திமுக அரசை தாக்கி பேசியதால் லைவ்வை கட் செய்திருப்பார்களோ என்றும் சலசலப்பை ஏற்படுத்தியது. இணையதள பிரச்னையால் லைவ் கட் ஆனதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று மைக்கும் சரியாக ஒலிக்கவில்லை ஆடியோ பிரச்னையும் எழுந்தது. சில நிமிடத்திற்கு பிறகு அனைத்து பிரச்னையும் சரியானது. தொடர்ந்து மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கவனிக்கத்தக்க வகையில் அஜித் ரசிகர்கள் வைத்த பேனர் மக்களை ஈர்த்துள்ளது. விஜய்யும், அஜித்தும் இணைந்து இருப்பது போன்று பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இது வைரலாகி வருகிறது. மாநாட்டில் திரண்டிருக்கும் தொண்டர்களை பார்த்ததும் விஜய் கண் கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Thalapathy Anna got truly emotional seeing the massive love and support from the people 🥹#TVKMaduraiManaadupic.twitter.com/lb1CaSAYZp https://t.co/5WGqP9ZypS
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) August 21, 2025





















