TVK Maanadu Madurai: தவெக மாநாட்டில் தொண்டர் மரணம்.. விஜய் இதுவரை என்ன செய்தார்?.. கொந்தளிப்பு
மதுரையில் நடைபெறும் தவெகவின் 2ஆவது மாநில மாநாட்டில் தொண்டர் ஒருவர் மரணம்.

மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் தவெக 2ஆவது மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடியை ஏற்ற உள்ளார். அதற்கு முன்பு மாநாட்டு திடலில் குவிந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் ராம்ப் வால்க் செல்வார் என்றும் கூறப்படுகிறது. கடும் வெயிலால் தொண்டர்கள் தண்ணீருக்கு அல்லல்படும் நிலையில், சொன்ன நேரத்தை காட்டிலும் முன்கூட்டியே மாநாடு தொடங்கியுள்ளது.
விஜய் அப்பா அம்மா வருகை
மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர். இந்த மாநாட்டில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் வருகை தந்துள்ளனர். முன்னதாக மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதனையும் மீறி மாநாட்டிற்கு வந்த குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு பவுன்சர்கள் அழைத்து சென்றனர்.
மதுபானம் அருந்தும் தொண்டர்கள்
மேலும், பாப்பரத்தி பகுதியை சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகள் பாதி நேரத்தோடு இன்று மூடப்பட்டது. அரசு மதுபானக்கடைகளை மூடவும் மதுரை ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில், தவெக தொண்டர்கள் மதுபான கடைக்கு சென்றுவிட்டு மாநாட்டிற்கு செல்லும் வீடியோவும் வெளியாகி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளாது. இதைப் பார்த்த மக்கள் என்ன பண்ணி வச்சிருக்கீங்க என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொண்டர் மரணம்
இந்நிலையில், தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர் ஒருவர் மரணமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சக்கிமங்கலம் பிரிவு 4 வழிச் சாலையில் வந்த போது தவெக தொண்டர் பிரபாகரன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி வருத்தத்தை ஏற்பட்டுள்ளது.2 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவர் மாநாட்டிற்காக பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபான்று கடந்தாண்டு நடந்த மாநாட்டிலும் 6 பேர் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் இரங்கல் தெரிவித்தார். தொண்டர்களின் குடும்பத்தை பற்றி கவலை இல்லை என்ற பேச்சும் அடிபட்டது.





















