’மக்களின் நிலையை மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள்’ - மின் கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!
”மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்” - டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் பயன்படுத்தும் யூனிட்டுகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ட்வீட்
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்தப் பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 18, 2022
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இது தான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 18, 2022
ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 18, 2022
அதில், “மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்தப் பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்வதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக அறிவித்துள்ளார்.
மேலும், நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.