மேலும் அறிய

TTV Dhinakaran: தவெகவிற்கு டிடிவி தினகரன் மறைமுக ஆதரவா.? காமராஜை நீக்கியது நாடகமா.? ஓ.. இப்படி ஒரு ஐடியாவா.?

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசி, தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய அமமுக எம்எல்ஏ காமராஜை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆனால், அது ஒரு நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது, அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர், தவெக ஆட்சி 5 ஆண்டுகளும் தொடர வேண்டும் என்று விரும்புவதாகவும், அதனால், தவெகவிற்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், அவர் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிக்கியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இந்நிலையில், அவரது நடவடிக்கை, தவெகவிற்கான மறைமுக ஆதரவுதானோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமமுக எம்எல்ஏ காமராஜ்

இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய அமமுக எம்எல்ஏ காமராஜ், முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன், கோடிக்கணக்கான ரூபாயில் ஏதேதோ இலவச திட்டங்களை அறிவிப்பார் என பெரும்பாலானோர் நினைத்திருந்ததாகவும், ஆனால், மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களை முதலில் அறிவித்ததை தான் வரவேற்பதாகவும், மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தவெக அரசு 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில், அந்த வகையில் சட்டமன்றத்திற்குள் நிறைய இளைஞர்கள் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் விஜய்யும் இளைஞரான இருப்பதால் ஒரு சிறந்த ஆட்சியை அவர் தருவார் என்று நம்புவதகாவும் கூறிய அவர், அதனால் அவர்களை ஆதரித்து பேசுவதாகவும் காமராஜ் கூறினார். 75 ஆண்டு, 50 ஆண்டுகால ஆட்சிக்கு விஜய் முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் அவரை நம்புவதாகவும், அதனால் தானும் அவரை நம்புவதால் புகழ்ந்து பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமமுகவிலிருந்து காமராஜை நீக்கிய டிடிவி தினகரன்

இதைத் தொடர்ந்து, அமமுகவிலிருந்து காமராஜை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் S. காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது, கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவரது இந்த செயல், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் என கூறப்பட்டுள்ளது. ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரம் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காமராஜை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

காமராஜ் நீக்கப்பட்டது நாடகமா.? டிடிவி தவெகவை மறைமுகமாக ஆதரிக்கிறாரா.?

இந்த நிலையில், அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கப்பட்டது ஒரு நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், என்டிஏ கூட்டணியில் இருந்துகொண்டு, அதற்கு நேரெதிராக இருக்கும் தவெகவை ஆதரிப்பது இயலாத ஒன்று. அதனால், காமராஜை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால், அவர் தனிப்பட்ட முறையில் தவெகவிற்கு ஆதரவை அளிக்க முடியும்.

ஏற்கனவே, அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டதாக செய்தி வெளியாகி, தவெகவினர், காமராஜ் கையெழுத்திடுவதுபோல் ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, அது போலி வீடியோ என்றும், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அப்படியே நடத்திருந்தால், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக என்று கேட்டு, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பினார். பிறகு அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக டிடிவி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், காமராஜும் டிடிவியுடன் அமர்ந்திருந்தார். அதோடு, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் அடித்துக் கூறினார்.

ஆனால், இன்றோ, அதற்கு நேர்மாறாக, சட்டமன்றத்திற்கு வந்து, தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, நான் நீக்குவரது போல் நீக்குகிறேன், நீ தவெகவிற்கு ஆதரவு கொடு என்று டிடிவி சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். எது எப்படியோ, விஜய்க்கு தற்போது ஒரு எம்எல்ஏவின் ஆதரவு கூடுதலாக கிடைத்துள்ளது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget