மேலும் அறிய

MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?

TTV Dinakaran: தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜை நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். நடந்தது என்ன.? பார்க்கலாம்.

இன்று சட்டப்பேரவையில், முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசியதுடன், தவெகவிற்கு ஆதரவளிப்பதாக பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளார் டிடிவி தினகரன். காமராஜ் பேசியது என்ன.? நடந்தது என்ன.? விரிவாக பார்க்கலாம்.

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் S. காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது, கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காக பாடுபட்ட அமமுக கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து சொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரம் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாரும், காமராஜை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பேரவையில் காமராஜ் பேசியது என்ன.?

இன்று சட்டப்பேரவையில் பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெக அரசையும், அதன் தலைவரும், முதலமைச்சருமான விஜய்யை புகழ்ந்து பேசினார். அவர் பேசும்போது, முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன், கோடிக்கணக்கான ரூபாயில் ஏதேதோ இலவச திட்டங்களை அறிவிப்பார் என பெரும்பாலானோர் நினைத்திருந்ததாகவும், ஆனால், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முதலில் அறிவித்ததை தான் மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தவெக அரசு 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில், அந்த வகையில் சட்டமன்றத்திற்குள் நிறைய இளைஞர்கள் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் விஜய்யும் இளைஞரான இருப்பதால் ஒரு சிறந்த ஆட்சியை அவர் தருவார் என்று நம்புவதகாவும் கூறிய அவர், அதனால் அவர்களை ஆதரித்து பேசுவதாகவும் காமராஜ் கூறினார். 75 ஆண்டு, 50 ஆண்டுகால ஆட்சிக்கு விஜய் முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் அவரை நம்புவதாகவும், அதனால் தானும் அவரை நம்புவதால் புகழ்ந்து பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
Director Bharathiraja: மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Ultraviolette F77: அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
Embed widget