மேலும் அறிய

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதராடை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

74 –ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்த்துறையின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஏற்றுக்கொண்டார்கள்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை

கரூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை மற்றும் NCC, NSS, Scout, JRC-யின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களை பறக்க விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ää சுந்தரவதனம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.3,60,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 11  பயனாளிகளுக்கு ரூ.1,32,000 மதிப்பிட்டில் உதவித்தொகையும், மாற்றுத் திறனாளிகள் சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.25,000- மதிப்பிலான திறன்பேசிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ 50,001 மதிப்பில் சிறு வங்கி கடனுதவிகளும், தோட்டக்கலை துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணை வளர்ச்சி திட்டம் 1 பயனாளிகளுக்கு ரூ.40ஃ- மதிப்பிலான், தேசிய வளர்சசி திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.8000 வேளாண் உபகரணங்களும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.18,89,000 மதிப்பிட்டில் வங்கி கடனுதவிகளும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக தேசிய எண்ணெய் இயக்கத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.2100- மதிப்பில் எண்ணெய்வித்துகளும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணை வளர்ச்சி திட்டம் 1 பயனாளிகளுக்கு ரூ.120  மதிப்பிலான உபகரணங்களும்ää 4 நபர்கள் 40,000 மதிப்பிலான பரிசுகளும், வேளாண்மை பொறியியல்த்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணை வளர்ச்சி திட்டம் 2 பயனாளிகளுக்கு ரூ.1,55,000 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி குடியிருப்புத்(ஊரகம்) திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு ஆணைகளையும், 1 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஓரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு ஆணைகளையும், மாவட்ட முதண்மை வங்கி முலம் 1 பயனாளிகளுக்கு ரூ-1,60,000 மதிப்பிலான கடனுதவிகளையும், என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.28,21,261 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
      
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை

பின்னர் 10 ஆண்டுகள் சிறப்பாக பணபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களும் அணுவித்தும். மேலும் சிறப்பாக பணிபுரிந்த 407 அரசுத் துறை அலுவலர்கள் இதில்;  77 காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அதனைத் தொடர்ந்து  காவல்த்துறையின் சார்பில் மரம் வளர்ப்போம் மனித நேயம் காப்போம் என்ற விழிப்புணர்வு நாடகம், தற்காப்புக் கலை, தமிழர் பாரம்பரியகலை, கரூர் துப்பறியும் பிரிவு மோப்பநாய் படைப்பிரிவு வரவேற்பு மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து அரசு இசைப்பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தரகம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி கோ.சீத்தப்பட்டி, அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மார்னிங்ஸ்டார் கரூர், ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முத்தனுர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரிய குளத்துபாளையம், அன்பாலயம் சிறப்பு பள்ளி, ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு  பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்கள். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.  
  
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் சினிவாசன் (மகளிர் திட்டம்), கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் கீதா,வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் திரு.தண்டாயுதபாணி (பொது), சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், வட்டாச்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget