Train Cancel: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை: கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில்கள் ரத்து! முழு விவரம் இதோ!
Train Cancelled: " கவரப்பேட்டை -கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் 17 மின்சார ரயில்கள் இன்று ( 09-06-2025) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது"

சென்னை புறநகர் மின்சார சேவை என்பது மிக முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த ரயில் சேவையில் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பணி நிமித்தமாக சென்னைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இந்த ரயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக தடைபடுவது வழக்கம்.
பராமரிப்பு பணிகள்
அந்த வகையில் இன்று சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே, இன்று காலை 11:20 மணி முதல் மாலை 3:20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் தடை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முழுமையாக ரத்தாகும் ரயில்களின் விவரம்
காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 12:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 1:05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
மதியம் 12:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை மதியம் ஒரு மணிக்கு செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை மதியம் 2:30 மணிக்கு செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை மதியம் 3:15 மணிக்கு செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இரவு 9 மணிக்கு செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து 11:40 மணிக்கு ஆவடி வரை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சூளூர்பேட்டையில் இருந்து நெல்லூர் செல்லும் மாலை 3:50 மணி இரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
நெல்லூரில் இருந்து மாலை 6:45 மணிக்கு சூளூர்பேட்டை வரும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில் விவரம்
செங்கல்பட்டில் இருந்து காலை 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோன்று கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார வேர்கள் கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















