மேலும் அறிய

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்

டாஸ்மாக் முறைகேடு விவாகரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வீட்டில் ED சோதனை நடைபெற்ற நிலையில், கிழிந்த நிலையில் கிடைத்த ஆவணங்களில் உள்ள ரத்தீஷ் யார் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு விவாகரம் தொடர்பாக, இன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டபோது, அவரது வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடைத்த ஆவணங்களில், ரத்தீஷ் என்பவரிடம் விசாகன் பேசிய வாட்ஸ்அப் சாட்டின் விவரம் கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த ரத்தீஷ் யார் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

விசாகன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. விசாரணை

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விசாகனின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன் பிறகு, அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, விசாகனின் வீட்டின் அருகே, கிழந்த நிலையில் சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். அதில், ரத்தீஷ் என்பவரிடம், டாஸ்மாக் நிர்வாக விஷயங்கள் குறித்து விசாகன் பேசிய வாட்ஸ்அப் சாட்டுகளின் ஸ்க்ரீன்ஷாட் சிக்கியுள்ளது. இது குறித்து அறிந்த அதிமுக, சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

யார் இந்த ரத்தீஷ்? கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்ட அதிமுக

இந்த விவகாரம் குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ?

Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை. 

இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?

#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.

கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

இவ்வாறு அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
Theni power cut (03-08-2026): தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget