பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியசாமி உறுதி
மழை காரணமாக தக்காள் வரத்து குறைந்து விலை அதிகரித்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்றும், வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை குறைந்த விலையில் விற்கப்படும் எனவும் கூறினார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி குறைந்த விலையில் விற்கப்பட்டதாகவும், முதற்கட்டமாக நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், தேவை அடிப்படையில் நியாய விலைக்கடை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பண்ணை பசுமை கடைகள் மூலம் தரமான தக்காளி காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி மக்கள் பயன்பெற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மழை காரணமாக தக்காள் வரத்து குறைந்து விலை அதிகரித்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும்.
#BREAKING | விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமிhttps://t.co/wupaoCQKa2 | #TomatoPrice #Tomato #TNGovt pic.twitter.com/OxFZCZK3ZD
— ABP Nadu (@abpnadu) May 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்