மேலும் அறிய

Nithyananda: விளக்கேற்றி செல்ஃபி எடுங்கள்... நான் குணமாவேன்...' பக்தர்களுக்கு நித்தி இட்ட புதிய கட்டளை!

உலகம் முழுவதிலும் உள்ள எங்களது தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது. தயவுசெய்து பணத்தை அனுப்புவதை நிறுத்துங்கள்...

பிரபல சாமியாரான நித்தியானந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு பணம் அனுப்பவதை நிறுத்துமாறி கூறி ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். 

அந்தப் பதிவில், “இது அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கானது. தயவு செய்து எனது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக பணம் அனுப்புவதை நிறுத்தவும்.   

  • எனது உடல்நிலை குறித்தான வதந்திகள் பரவ ஆரம்பித்ததிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள எங்களது தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது.
  • தயவுசெய்து பணத்தை அனுப்புவதை நிறுத்துங்கள். 

  • என்னுடைய பக்தர்களே நான் சொல்வதை உன்னிப்பாக கேளுங்கள். என்னிடம் இருந்து பிரிந்திருக்கும் உங்களிடம் இருக்கும் இந்தப் பிரிவு, பதற்றம், என்னை மீண்டும் பார்க்க முடியுமா, முடியாதா என்ற ஏக்கம், பாதுகாப்பு  இல்லாத நிலை, தரிசனம் செய்வதற்கான முயற்சிகளை மீண்டும் செய்ய முடியுமா முடியாதா போன்றவையெல்லாம் ஒரு அழகான வலி. இந்த வலி அஜப ஜப மகா வாக்கியத்தின் படி ஆழமான பக்தி மையமாக, ஆன்மீக பயிற்சி மூலமாக மாறுகிறது. 
  • நாம் கடந்து வருவது சுனாமியோ, நிலநடுக்கமோ அல்ல. உங்களுக்கு எங்கு பணம் அனுப்பினால் மனநிறைவு கிடைக்குமோ அங்கு அனுப்புங்கள்.    
  • நாம் தற்போது கடந்து வருவது என்பது பரமசிவன் நமக்கு வழங்கியிருக்கும் ஆன்மீக வாய்ப்பு. 
  • பரமசிவன் இந்த சமாதியின் மூலம் அதிதீவிரத்துடன் என்னுள் குடிகொண்டிருக்கிறார். 
  • என்னுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு பணத்தையும், பொருட்களையும் அனுப்புவதற்கு இது நேரமில்லை.   

உங்களுடைய பயனுக்காகவும், இந்த உலகத்தின் பயனுக்காகவும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களது வீட்டில் என்னுடைய குருநாதர் அருணகிரி  யோகிஷ்வர புகைப்படத்தின் முன்னே ஒரு  விளக்கை ஏற்றி, அவர் இன்னும் என்னுடைய  உடலில் அதிக தீவரத்துடன் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

                                                       Nithyananda: விளக்கேற்றி செல்ஃபி எடுங்கள்... நான் குணமாவேன்...' பக்தர்களுக்கு நித்தி இட்ட புதிய கட்டளை!

நாளொரு மேனியும் பொழுதொரு பூஜையுமாய், தினமும் வீடியோக்கள், போட்டாக்களால் நிரம்பி வழிந்த நித்தியானந்தாவின் சமூக வலைதள பக்கம், கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் முடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எந்த ஆன்மிகத் திருவிழா நடந்தாலும், அதை அப்படியே தன் நாட்டிலும் நடத்தி, அந்த கடவுளாகவே மாறி, அவரே அர்ச்சனை செய்து, அவரே ஆசி வழங்கி வந்த நிகழ்வுகள் எல்லாம், திடீரென எப்படி நின்று போனது? என, அவரை பின்தொடர்வோர் பதறிப்போயினர்.

கைலாஷ தேசத்தில் நித்தியானந்தாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதில் அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின. சிலர் இரங்கல் கூட தெரிவிக்க தயாராகினர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார் நித்தியானந்தா. இதற்கிடையே விரைவில் நித்தியானந்தா ஜீவசமாதி அடையப்போவதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் தன்னுடைய உடல் நிலை குறித்து விளக்கத்தை நித்தியானந்தா அறிக்கையாக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget