Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் பச்சை காய்கறிகளின் விலையானது அதிகரித்துள்ளது. அதே நேரம் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது குறைந்துள்ளது.

கொட்டிக்கிடக்கும் தக்காளி
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக உள்ளது. எனவே காய்கறி சந்தையில் தினந்தோறும் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்திற்க அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கி செல்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல விலையும் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தக்காளி விலையானது குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. 100 ரூபாய்க்கு 3 கிலோ முதல் 4 கிலோ வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது.
வெங்காயமும் மூட்டை மூட்டையாக குவிந்துள்ளது. இதனால் வெங்காயம் ஒரு கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பை நிறைய அள்ளிச்செல்கிறார்கள். அதே நேரம் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பச்சை காய்கறிகளின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பீட்ரூட், அவரைக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளை வாங்கி செல்லும் நிலையானது நீடிக்கிறது. எனவே கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
வெங்காயத்தின் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பச்சை காய்கறி விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50-க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது




















