காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி! டெல்டாவை வெளுக்கப்போகும் கனமழை! மற்ற மாவட்டங்கள் எப்படி?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் எதிரொலியாக இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் எதிரொலியாக இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்உ வங்கக் கடல் பகுதிகளிலும் வடக்கு திசையில் நகர்ந்து 48 மணிநேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றூம் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றூம் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
ஏப்.10 மற்றும் ஏப்.11ம் தேதிகளில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

