Today Headlines : சென்னையில் விடிய விடிய மழை.. மிதக்கும் தென் மாவட்டங்கள்.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை எச்சரிக்கை
கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மண்டல கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு
— Greater Chennai Corporation (@chennaicorp) November 26, 2021
(1/3) pic.twitter.com/ISzp59lUO6
சென்னை விடிய விடிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
கனமழையால் தூத்துக்குடி சூழ்ந்த வெள்ளநீர்- வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி - கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் மூழ்கியதால் 12 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
வெளிமாநிலங்களில் வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறையும் தக்காளி விலை
இந்தியா:
காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை - பிரதமர் மோடி
உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - தலைமை வழக்கறிஞர் வேணுகோபால்
டிசம்பர் 15 முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவை தொடங்கப்படும் என இந்திய விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு
உலகம்:
புதிய வகை கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் என பெயர் வைத்த WHO. கொரோனாவை விட ஆபத்தானது என எச்சரிக்கை
தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இஸ்ரேல் நாடுகளில் புதிய வகை கொரோனா
விளையாட்டு:
இந்தியா - நியூசி டெஸ்ட் போட்டி: 345 ரன்கள் குவித்த இந்தியா; 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசி 129 ரன்கள்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்