கல்யாணத்துக்காக சேர்த்த பணத்தில் பெண்கள் விடுதி கட்டுங்க.. மகள் கேட்டவுடன் Blank செக் கொடுத்த அப்பா..
பிரம்மாண்டமாக கல்யாணம் நடத்துங்கள் என்று பெண் பிள்ளைகளே டிமாண்ட் செய்யும் இந்தக் காலத்தில் மணப்பெண் ஒருவர் தனக்குக் கொடுக்க வைத்திருந்த பணத்தில் பெண்களுக்காக ஒரு விடுதி கட்டுமாறு வேண்டியுள்ளார்.
எனக்கு இத்தனை சவரன் நகை போடுங்கள், பிரம்மாண்டமாக கல்யாணம் நடத்துங்கள் என்றெல்லாம் பெண் பிள்ளைகள் சிலரே டிமாண்ட் செய்யும் இந்தக் காலத்தில் மணப்பெண் ஒருவர் தனக்குக் கொடுக்க வைத்திருந்த பணத்தில் பெண்களுக்காக ஒரு விடுதி கட்டுமாறு வேண்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர் சிங் கனோட். இவரது மகள் அஞ்சலி கான்வார். இருவருக்கும் பிரவீன் சிங் என்பவருக்கும் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது அஞ்சலி தனது தந்தையிடம் கூறியது தான் பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாகி உள்ளது.
அஞ்சலி என்ன சொன்னார்?
அப்பா, என் திருமணத்துக்காக நீங்கள் ரூ.75 லட்சம் சேர்த்து வைத்துள்ளீர்கள். அந்தப் பணத்தை பெண்களுக்கான விடுதி கட்டப் பயன்படுத்த வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். தந்தை கிஷோர் சிங் கனோடும், ஒப்புக் கொண்டார். மகளின் விருப்பத்துக்கு ஏற்ப, அந்தப் பணத்தை பெண்கள் விடுதி கட்ட கொடுத்தார்.
#positivenews #barmer #girleducation pic.twitter.com/UPl9BqXKfE
— Tribhuwan Singh Rathore 🇮🇳 (@FortBarmer) November 24, 2021
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பிப்பர் மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களிலும் செய்தியானது. இந்த முடிவுக்கு வெகுவாகப் பாராட்டு குவிகிறது.