Breaking Live | உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
BREAKING News Live Today In Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
LIVE
Background
BREAKING News Live:
சென்னையை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் தேங்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும், 044 - 25619204, 044 - 25619206, 044 - 25619207, 044-25619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாளை 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நாளை 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஊரடங்கை நவ.30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
கனமழை - தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அழைப்பு
புதுச்சேரியில் மழை தீவிரமடைவதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அழைப்பு; இன்று காலை முதல் 5 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது - மாவட்ட ஆட்சியர்