மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்று நடந்ததையும், இன்று நடக்கப்போவதையும் மொத்தமாக அறிய.. காலை தலைப்பு செய்திகள் இதோ!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம் - 9 ஆண்டுகளில் நாட்டின் பெயரை மட்டுமே மாற்ற முடிந்ததாகவும் விமர்சனம்
- செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம் - முதலமைச்சரே முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்
- சனாதன ஒழிப்பு என திமுக பேசுவது தமிழகம் குட்டிச் சுவராகி இருப்பதை திசைதிருப்ப நாடகம் - தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
- மத்திய அமைச்சர் எல். முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- பரப்பன அக்ராஹா சிறையில் இருந்தபோது சலுகைகளை பெற காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
- சேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
இந்தியா:
- ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்
- ஜி20 உச்சி மாநாட்டிற்கான குடியரசு தலைவர் மாளிகை அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என அச்சிடப்பட்டதால் சர்ச்சை - ஏசியன் மாநாட்டிலும் பாரத பிரதமர் என அழைப்பிதழ்
- இந்தியா என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என எதிர்க்கட்சிகள் ஆவேசம் - எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பாரத் என பெயர் வைத்தால் நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவீர்களா என்றும் கேள்வி
- சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை நாடு பாரதமாக இருக்கும் - அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து
- பிரக்யான் ரோவர் எடுத்த 3டி புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
- 5 நாட்கள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
- உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி
- பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கல்வெட்டு ஒன்றை திறக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த முதலமைச்சர் நிதிஷ் குமார் - காயமின்றி தப்பினார்
உலகம்:
- அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பது உறுதி - அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு
- பிரேசிலை தாக்கிய புயல் - கனமழை, வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி
- பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 50 பேர் பலி
- ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை
விளையாட்டு:
- உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் போபண்ணா ஜோடி
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஆடவர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கையிடம் போராடி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தான்
- இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்தது நியூசிலாந்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion