மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
3PM Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்.. மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines Today: காலை முதல் இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
-
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி, அவரது தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் ஆளுநரால் மறுக்க முடியாது : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
- கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
- மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிக்கப்படுவதாகவே பொருள்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து.
- மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு - வெளிநாட்டு நிதி மூலம் இதனை செய்துவிட்டதாக அடுக்கடுக்காக புகார்
- நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதியுதவிகள் இருந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதி வருவதாக கருத்து
- பதவிப்பிரமாணத்துக்கு முரணாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துகளை பேசி வருவதாக குற்றச்சாட்டு
- சர்வாதிகாரியாக நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டாம் என ஆளுநருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் - மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி விமர்சனம்
- அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
- பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்
மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் ராக்கெட் திட்ட இயந்திர சோதனை வெற்றி - 240 விநாடிகள் வெற்றிகரமாக இயக்கி பரிசோதனை - ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரியின் காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - கணக்கில் வராத ரூ.32 லட்சம் பறிமுதல்
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது - மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து
- நெய்வேலி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை - பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட தேர்வில் தோல்வியால் விபரீத முடிவு என தகவல்
- சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திட்டம்
- திண்டுக்கலில் ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை - போலீசார் தீவிர விசாரணை
- திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் அறிவிப்பு
- முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா? - ஆசிரியர் தேர்வு வாரியம் 10 ஆண்டுகளாக சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாக ராமதாஸ் கண்டனம்
- தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது - நிலக்கரி சுரங்கம் தொடர்பான கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில்
- கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடப்பதாக நடிகை அபிராமி குற்றச்சாட்டு
- புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion