ATM : ஏ.டி.எம். கொள்ளை எதிரொலி; தமிழக டி.ஜி.பி. வங்கிகளுக்கு அளித்த அறிவுரைகள் என்னென்ன?
கொள்ளையை தடுக்க ஏ.டி.எம். மையத்தையும், போலீஸ் நிலையத்தையும் இணைத்து அலாரம் கருவி பொருத்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்துள்ளார்.
கொள்ளையை தடுக்க ஏ.டி.எம். மையத்தையும், போலீஸ் நிலையத்தையும் இணைத்து அலாரம் கருவி பொருத்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்துள்ளார்.
ஏ.டி.எம். கொள்ளை சம்பவம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் ஏ.டி.எம் மையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 72 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியது. வித்தியாசமான முறையில் கியாஸ் இயந்திரம் வைத்து ஏ.டி.எம், இயந்திரத்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் போலீசாருக்கு மிகவும் சவாலாக அமைந்தது. வட மாநிலங்களிலிருந்து வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற ஏ.டிஎம் கொள்ளை எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நேற்று சென்னையில் டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அலாரம், நவீன கேமராக்கள்:
1. அனைத்து ஏ.டி.எம் மையங்களிலையும் அருகில் உள்ள காவல் நிலையத்தையும் இணைக்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனடியாக அலாரம் அடிக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும், அலாரம் கேட்ட உடன் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபடுவர்களின் முகத்தை தெளிவாக காட்டும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தஒப்பட வேண்டும்.
3. அதி நவீன கேமராக்கள் பொருத்தப்படும் போது வெளிப்படையாக இல்லாமல் ரகசியமாக இருக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் வங்கிகள் செயல்படுத்த வங்கிகளுக்கு அதிக செலவு ஏற்படாது என்றும், இதனால் இந்த மூன்று நடவடிக்கைகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்த 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மகும்பல்:
போலீஸ் விசாரணையில் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தண்டராம்பட்டு சாலை தேனிமலை அருகே இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் மர்ம கொள்ளையர்கள் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு, அதன் பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் கொள்ளையடித்து, ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி செல்லும் வழியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கி வரும் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துக்கொண்டு, போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.