மேலும் அறிய
Advertisement
TNPSC Press Meet Highlights: மே 21ல் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
TNPSC Group 2, 2A Exam Date: குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்
தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம், (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 (Group 2), குரூப்-2ஏ (Group 2A) தேர்வுக்கான தேதிகள் மற்றும் 6 ஆயிரம் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Group 2, 2A Exam Date: மே 21 குரூப் தேர்வுகள்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
- முதன்மை தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை் 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும்
- 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்
- மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேரமாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தலாம்
- டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை, பிப்ரவரி 23 ம் தேதி வெளியிடப்படும்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்
- 200 மதிப்புகளுக்கான தேர்வில், தமிழில் தகுதி மதிப்பெண் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும் என அறிவிப்பு. தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
- துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3 ம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும்
TNPSC: டிஎன்பிஎஸ்சி வழியாக பணியாளர்கள் நியமனம்
- பல்கலை கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டிஎன்பிசியிடம் ஒப்படைக்க தமிழ்நாடு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
- ஆவின், வீட்டுவசதிவாரியம், மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனமும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற கடிதம் வந்துள்ளது.
- தற்போது நியமிக்க உள்ள காலிபணியிடத்தில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion