TN Rain Alert: இந்த பக்கம் மழை.. அந்த பக்கம் வெயில்.. வாடி வதங்கும் மக்கள்..! வானிலை நிலவரம்தான் என்ன?
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 41 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 41 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நேற்று (11.06.2023) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (12.06.2023) காலை 8:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில், தேவ் பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தெற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.2023 அன்று நண்பகல், மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)- மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.
மிதமான மழை
3.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 12.06.2023 மற்றும் 13.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.06.2023 முதல் 16.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
12.06.2023 & 13.06.2023: தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிங்கம்புணரி (சிவகங்கை) 3, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கெட்டி (நீலகிரி), மாதவரம் AWS (திருவள்ளூர்), காரைக்குடி (சிவகங்கை), பெரம்பூர் (சென்னை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 2, சென்னை கலெக்டர் அலுவலகம், சத்தியமங்கலம் (ஈரோடு), திருவாலங்காடு (திருவள்ளூர்), பொதுப்பணித்துறை (சிவகங்கை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அயனாவரம். தாலுகா அலுவலகம் (சென்னை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.