TN Weather Update: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு...ஓரிரு இடங்களில் வெப்பநிலையும் கூடுமாம்...!
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
11.04.2023 முதல் 13.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 9, 2023
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பாபநாசம் (திருநெல்வேலி) 2, செங்கோட்டை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1 என்று வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் தாக்கம்