மேலும் அறிய

TN Weather Update: வாட்டி வதைக்கும் வெயில்... தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை.. !

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

TN Weather Update: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

18.04.2023 மற்றும் 19.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, 

20.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

21.04.2023 மற்றும் 22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

18.04.2023 மற்றும் 19.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் மாவட்டத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 41.2 டிகிரி செல்சியஸ், வேலூர் 40.3 டிகிரி செல்சியஸ், ஈரோடு - 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அதனை தொடர்ந்து திருச்சி – 39.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 39.6 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 39.2 டிகிரி செல்சியஸ், மதுரை - 39.4 டிகிரி செல்சியஸ், தருமபுரி - 39.1 டிகிரி செல்சியஸ், கோயம்புத்தூர் - 38.2 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்ச 38.7 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வெப்ப அலை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவை எட்டவில்லை.  வெப்ப அலை நிகழ்வு பதிவாக வாய்ப்பு இருப்பின் அறிவிக்கப்படும் என இந்திய வானிலை தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

Vegetable Price: காய்கறி விலையில் மாற்றமா? எந்தெந்த காய்கறிகளின் விலை உயர்வு? இன்றைய நிலவரம் இதோ..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
Embed widget