TN Weather Live Updates: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வானிலை தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Fishermen Warning : இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Chennai Weather news Updates: சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் . அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
TN Weather LIve Updates Schools Holiday: கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, வேலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
TN Weather Updates: பல மாவட்டங்களின் கனமழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த மாவட்டங்களில் 204 மிமீ வரை மழை பொழிவு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.