Chennai Rains 2021 | அடித்துத்துவைக்கும் கனமழை.. எப்போது குறையும்? அடுத்த 5 நாட்களுக்கான மழை விவரம்..
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரகை்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
வானிலை தகவல் 29.11.2021 pic.twitter.com/yhgEvBZsv6
— TN SDMA (@tnsdma) November 29, 2021
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாவே குமரி, தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முதல் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களிலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளபோல சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இந்த கனமழை காரணமாக சென்னை,செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வருகின்ற 3 ம் தேதிக்கு பிறகு குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. pic.twitter.com/zFuRhvM6WY
— TN SDMA (@tnsdma) November 29, 2021
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்வும், தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்