![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain Alert: இரவு 7 மணிவரை 30 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே..! எச்சரிக்கையா இருங்க..!
Tamilnadu Rain: தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain Alert: இரவு 7 மணிவரை 30 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே..! எச்சரிக்கையா இருங்க..! TN Rain Alert Rain Expected in 30 Districts in Next 3 Hours Tamil Nadu Weather Update TN Rain Alert: இரவு 7 மணிவரை 30 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே..! எச்சரிக்கையா இருங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/056d4e8e577b841c6360e555338022ff1721909693148572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ( இரவு 7 மணி வரை ) 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 மாவட்டங்களில் மழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம் , நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 25, 2024
ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக இருக்கவும். வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் நபர்கள், பாதுகாப்பாக செல்லுங்கள். தேவையின்றி , வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)