TN Rain Alert: இன்றும், ஆகஸ்ட் 11-இலும் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Tamilnadu Rain Updates: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2024-08-08-16:38:27 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம்,ஸ்ரீபெரும்புதூர்,திருப்போரூர்,திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/RDud6Iu3ug
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 8, 2024
இன்று 8 மாவட்டங்களில் கனமழை:
தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 9, 10:
அடுத்த 2 தினங்களை பொறுத்தவரை , தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11:
தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12
நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 8, 2024
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா , தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றானது, மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும் எனவும் இடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Also Read: மழைக்காலங்களில் கால்நடைகளை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? - அதிகாரிகளின் டிப்ஸ் இதோ.!