மழைக்காலங்களில் கால்நடைகளை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? - அதிகாரிகளின் டிப்ஸ் இதோ.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தால் கால்நடைகளை கவனத்தோடு பாதுகாக்க விவசாயிகளுக்கு டிப்ஸ்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு மண்டல அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு மண்டல அலுவலர் செய்தி குறிப்பில் கூறியதாவது;
மழைப்பொழிவு இருக்கும் நேரங்களில் கால்நடைகளை வெளியே அழைத்துச் சென்று மேய்ப்பது இயலாத காரியம். அதனால் கொட்டகையில் அடைத்து வைத்து தீனி அளிக்க வேண்டி இருக்கும். இதனால் தேவையான அளவு வைக்கோல், கடலை கொடி போன்றவை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் ஏறி குளம் குட்டை போன்றவை நிரம்பி காணப்படும், இதனால் மேய்ச்சல் நிலமும் பெருமடையினால் மேய்ச்சல் நேரமும் குறையும், எனவே கொட்டகையில் தீனி அளிக்க வேண்டிய நிலை இருக்கும். இதே போல் வைக்கோல் போர்களை நன்கு கவனிக்க வேண்டும். தற்போது எந்திரம் மூலம் கட்டு கட்டி அடுக்குவதால் மழை உட்புகுந்து வைக்கோல் நனைந்து பூஞ்சை பூத்து கருத்து விடும். இதை கால்நடைகள் விரும்பி உண்ணாது, அப்படியே உண்டாலும் அஜீரண கோளாறு மற்றும் தோளில் கட்டி ஏற்படும். எனவே வைக்கோல் போர்களை தார்ப்பாலின் போட்டு மூடுவது நல்லது.
மழைக்காலங்களில் மாடுகளை மரத்தடியில் கட்டகூடாது
வைகோலை பிடுங்கி சிறிது காற்றாட விட்டு கால்நடைகளுக்கு அளிக்கலாம். மழைக்காலங்களில் மாட்டு கொட்டைகளை நன்கு பராமரிக்க வேண்டும். அதில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதிக மழையினாலும் மாடு கட்டும் வெளியிடங்கள் சேரும் சகதியமாக இருந்தாலும் மாடுகளை கோட்டையிலே கட்டி வைக்க நேரிடும். மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரை அவ்வபோது அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். மாடுகளை எப்போதும் மின்சார கம்பங்களில் கட்டக் கூடாது. மழைக்காலங்களில் மாடுகளை மரத்தடியில் கட்ட வேண்டாம். மாடுகள் அதிக நேரம் இறத்தாறையில் இருப்பதால் நத்தாங்கால் ஏற்பட்டு பாத அறுக்கள் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற கால்நடைகளுக்கு தீவனத்தில் தாது உப்பு கலவை கலந்து அளிப்பது நல்லது என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.