மேலும் அறிய

Corona in TN: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. முகக்கவசம் அவசியம்.. எச்சரிக்கை செய்யும் தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று, தற்போது 30க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால், கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்.  முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை திரும்பப் பெறவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி அணிய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார். இதனால் மக்கள் கவனமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று, தற்போது 30 க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்  அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது. 

இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget