மேலும் அறிய

Governor Rule: சொதப்பிய தவெக.. ஆளுநர் ஆட்சியை நோக்கி தமிழ்நாடு? சிக்கலில் தமிழக அரசியல்

டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றச்சாட்டை எடுத்து வைத்ததுள்ளது தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அமல்ப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

தவெக அரசு அமைக்க  இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்ட நிலையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றச்சாட்டை எடுத்து வைத்ததுள்ளது தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அமல்ப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது 

குதிரை பேரம் விவகாரம்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆனால் சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அமமுக எம்.எல்.ஏ காமராஜை வைத்து குதிரை பேரம் பேசியதாக குற்றச்சாட்டை எடுத்து வைத்தது பெரிய திருப்பமாக அமைந்தது. மேலும் தவெக சார்பில் எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை ஆதாரமாக அறிவித்தது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள அடுக்கடுக்கான புகார்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் ரீதியாகப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வை தவெக தரப்பினர் கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் மீது இத்தகைய "கடத்தல்" புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதிருப்தியில் ஆளுநர் மாளிகை

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக எம்.எல்.ஏ காமராஜ் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, "நான் விஜய்க்கு எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை" என்று அவர் திட்டவட்டமாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. போலி கடிதங்கள் மற்றும் கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆதாரமாகக் காட்டி, மாநில அரசை அமைக்க உரிமை கோருவது 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என ஆளுநர் ராஜேந்திர விஸ்வதாக் அர்லேக்கர் கடும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தவெக-விற்கு சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆளுநர் ஆட்சி?

தற்போது எழுந்துள்ள எம்.எல்.ஏ கடத்தல் மற்றும் போலி கடிதப் புகார்கள் இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளன. முறையற்ற வழிகளில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஆளுநர் கருதுவதால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான பரிந்துரையை அவர் பரிசீலிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் பட்சத்தில், மாநில அமைச்சரவை கலைக்கப்பட்டு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படும். ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆளுநருக்கு உதவியாக மத்திய அரசால் நியமிக்கப்படும் சிறப்பு ஆலோசகர்கள் நிர்வாகத்தைக் கவனிப்பார்கள். இதன் மூலம் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரிலேயே செயல்படுத்தப்படும். மே 10 கெடு முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் சூழல் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை தமிழகத்தில் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், அது மாநிலத்தில் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.இதனால் தமிழ்நாடு அரசு எதிர்த்துவந்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget