முதல் முறை தம் அடிக்கும்போது பலர் சொல்லும் காரணங்கள் இதுதானாம்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பலர் முதன்முறையாக புகைபிடிக்க பலருக்கான முக்கிய காரணம் நண்பர்கள்தானாம். அவர்களுடன் சேர்ந்து புகை பிடிப்பதை பலர் விரும்புகிறார்களாம்

வேலை அழுத்தம், படிப்பு டென்ஷன், தனிப்பட்ட பிரச்சனைகளால் பலர் சிகரெட் பிடித்தால் ரிலாக்ஸ் ஆகலாம் என்று நினைக்கிறார்களாம்

சினிமா மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக புகைபிடிப்பதை ஸ்டைல், கூலாக கருதுகிறார்களாம்

ஒருமுறை முயற்சி செய்தால் என்ன ஆகும் என்ற எண்ணத்துடன் பலர் தொடங்குகிறார்களாம்

கவலை, மன அழுத்தம், தனிமை போன்ற மனநலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சிலர் புகைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நண்பர்கள் குழுவில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் பிடிக்காவிட்டாலும் புகைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

சினிமாக்களில் கதாநாயகர்கள் புகைபிடிப்பது, சமூக ஊடகங்களில் தோன்றும் உள்ளடக்கம் இளைஞர்களைப் பாதிக்கிறதாம்

தூக்கம் வராமல் இருக்க அல்லது களைப்பை போக்க சிகரெட் பிடிக்கிறார்கள். நிகோடின் தற்காலிகமாக சுறுசுறுப்பாக உணர வைக்கிறது.

ஒருமுறை பழக்கமாகிவிட்டால் நிகோடினைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிறகு நிறுத்த நினைத்தாலும் கடினமாகிவிடும்.

குடும்பத்தில் யாராவது புகைபிடித்தால் குழந்தைகளுக்கும் அதே பழக்கம் வர வாய்ப்பு உள்ளது.